நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை தைப்பூச விழாவிற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் வரவில்லை; பிரதமர் வருவார் என நம்புகிறோம்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலை தைப்பூச விழாவிற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரவில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருவார் என நம்புகிறோம் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா கூறினார்.

தற்போதைய மாட்சிமை தங்கிய மாமன்னர் ஜொகூரில் நடைபெறும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வார்.

அதன் அடிப்படையில் பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம். ஆனால் இம்முறை அவரால் கலந்து கொள்ள முடியாது. 

வரும் ஆண்டுகளில் அவர் வரலாம் என்று அரண்மனையில் இருந்து எங்களுக்கு கடிதம் கிடைத்துள்ளது.

மாமன்னர் நிச்சயம் பத்துமலைக்கு வருவார் என நாங்கள் நம்புகிறோம்.

அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவரும் தைப்பூச விழாவிற்கு வருவார் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இதனை தவிர்த்து சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset