நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிர்சியோயேவின் வருகை மலேசியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துகிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

இரு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் வருகை மலேசியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த ஷவ்கத் மிர்சியோயே தாம் அனைவரது சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அன்வாரதனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

2016-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து மலேசியாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் அன்வார் உஸ்பெகிஸ்தானுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று மதியம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அன்வாரைச் சந்தித்த மிர்சியோயேவுக்கு, அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டில், மத்திய ஆசிய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset