செய்திகள் மலேசியா
AW139 ஹெலிகாப்டர்களின் குத்தகை தொடர்பான பிரச்சனைகள் குறித்துத் தற்காப்பு அமைச்சர் விளக்கமளிப்பார்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
16.6 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 28 AW139 ஹெலிகாப்டர்களின் குத்தகை தொடர்பான பிரச்சனைகள் குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் விளக்கமளிப்பார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் குத்தகை தொடர்பில் புதிய ஊழல் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேட்டபோது பிரதமர் அன்வார் இவ்வாறு கூறினார்.
நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், 16.6 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 28 AW139 ஹெலிகாப்டர்களை குத்தகைக்கு எடுப்பதில் ஊழல் இருப்பதாக கூறினார்.
முன்னதாக, நேற்றுமக்களவையில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தும் போது, லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலிகாப்டர் குத்தகையின் விலை ஏன் அதிகமாக உள்ளது என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 5:52 pm
குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலை விதியை பிரதமர் காப்பாரா?: டத்தோ கலைவாணர் கேள்வி
February 5, 2025, 5:43 pm
காசா குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது: பிரதமர் அன்வார்
February 5, 2025, 5:34 pm
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 3 திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளது: அஹமத் மஸ்லான்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm