செய்திகள் மலேசியா
பத்துமலை திருத்தலத்தில் 135ஆவது தைப்பூசத் திருவிழா 1.8 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரள்வர்கள்: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலை திருத்தலத்தில் 135ஆவது தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் 1.8 மில்லியனில் இருந்து 2 மில்லியன் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஸ்ரீ மகா மாரியம்மன தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா கூறினார்.
பத்துமலையில் கடந்த 1891ஆம் ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்று முதல் இன்று வரை பத்துமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.
அவ்வகையில் இவ்வாண்டு தைப்பூச விழா வெள்ளி ரத ஊர்வலத்துடன் தொடங்கவுள்ளது,.
பிப்ரவரி 9ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெள்ளி ரதம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும்.
மறுநாள் பிப்ரவரி 10ஆம் தேதி மாலை வெள்ளி ரதம் பத்துமலையை வந்தடையும். மாலை 5.30 மணிக்கு சேவற்கொடி ஏற்றப்பட்டு தைப்பூச விசா அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
பிப்ரவரி 11ஆம் தேதி காலை 7 மணி முதல் சிறப்பு பூஜைகளுடன் தைப்பூச விழா தொடங்கும்.
அன்றைய தினம் அதிகமான பக்தர்கள் பத்துமலைக்கு வந்து நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.
அதோடு அரசாங்க பிரமுகர்களுடன் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறும். மேலும் அன்றைய தினம் முழுவதும் பல நிகழ்வுகள் பத்துமலையில் நடைபெறும்.
பிப்ரவரி 12ஆம் தேதி வெள்ளி ரதம் மீண்டும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை நோக்கி புறப்படும் என்று அவர் கூறினார்.
தைப்பூச விழா பிப்ரவரி 11ஆம் தேதி என்றாலும் பக்தர்கள் இப்போதே நேர்த்திக் கடனை செலுத்த தொடங்கி விட்டனர்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.
குறிப்பாக அதிகமான போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளின் ஈடுப்படவுள்ளனர்.
இவ்வாண்டு பத்துமலைக்கு வருபவர்களும் நேர்த்தி கடனை செலுத்துபவர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் வாருங்கள்.
இது இந்த தைப்பூச விழாவை மேலும் சிறப்பூட்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 5:52 pm
குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலை விதியை பிரதமர் காப்பாரா?: டத்தோ கலைவாணர் கேள்வி
February 5, 2025, 5:43 pm
காசா குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது: பிரதமர் அன்வார்
February 5, 2025, 5:34 pm
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 3 திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளது: அஹமத் மஸ்லான்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm