நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திம் ZERO B40 திட்டத்தின் கீழ்  யுவன், மூர்த்திக்கு இலவச கல்வி உதவிகள் வழங்கப்படும்: சுரேன் கந்தா

புக்கிட்ஜாலில்:

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திம் ZERO B40 திட்டத்தின் கீழ்  மாணவர்களான யுவன், மூர்த்திக்கு இலவச கல்வி உதவிகள் வழங்கப்படும்.

அந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.

இந்திய மாணவர்களிடையே மிகப் பெரிய கல்வி புரட்சியை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் செய்து வருகிறது.

அதன் அடிப்படையில் இவ்வாண்டும் முன்னேற்றம் எனும் திட்டத்தை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கியுள்ளது. நாட்டில் ஏழை இந்திய குடும்பங்கள் இருக்கக் கூடாது.

அதற்கு அவர்களுக்கு உரிய கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் ஈ-காசே தரவு பட்டியலில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வழங்கவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் புக்கிட் ஜாலில் பிபிஆர் கம்போங் முகிபாவில் வசிக்கும் மாணவர்களான யுவன், மூர்த்தி ஆகியோருக்கு இலவச கல்வி உதவிகள் வழங்கப்படவுள்ளது.

பெற்றோர் இல்லாததால் பாட்டி சந்திரா வளர்ப்பில் இம்மாணவர்கள் உள்ளனர். இங்கு 25 வயதுடைய உடற்பேரு குறைந்த இளைஞரும் உள்ளார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் இப்பிள்ளைகளை அவர் வளர்த்து வருகிறார்.

கல்வியின் வாயிலாக இந்த குடும்பத்தில் உருமாற்றத்தை கொண்டு வர முடியும்.

அதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்த உதவியை செய்கிறது என்று அவர் கூறினார்.

இதனிடையே முன்னேற்றம் திட்டத்தில் இணைய விரும்பும் வசதிக் குறைந்த மாணவர்கள் அல்லது பெற்றோர் 01111229464  என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset