செய்திகள் மலேசியா
குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலை விதியை பிரதமர் காப்பாரா?: டத்தோ கலைவாணர் கேள்வி
கோலாலம்பூர்:
குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலை விதியை பிரதமர் காக்க வேண்டும்.
நம்பிக்கை இயக்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டில் மிகச்சிறந்த பிரதமராக செயல்பட்டு வருகிறார். நாட்டை வளர்ச்சி பாதிக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் தொடர்ந்து போராடி வருகிறார்.
அதே வேளையில் கருணை உள்ளம் கொண்ட அவர் காஜாவை மீண்டும் கட்டி எழுப்பவும் நடவடிக்கைகளுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.
அதே வேளையில் குவாந்தான் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பல ஆண்டுகளாக குழு கொள்கலனில் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் இப் பள்ளிக்கு நிதி ஒதுக்கப்பட்டும் இப்ப பள்ளி இன்று வரை கட்டப்படவில்லை. கிட்டத்தட்ட 50 மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
மிகவும் மோசமான கொள்கையில் அவர்கள் கல்வி பயில்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகவே கருணை உள்ளம் கொண்ட நமது பிரதமர் இந்த தமிழ் பள்ளியின் தலைவிதியை காக்க வேண்டும்.
அதே வேளையில் நாடாளுமன்றத்தில் இத்தமிழ்ப்பள்ளி விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும்.
நமது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர மற்றவர்களும் இந்த விவகாரம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்ப வேண்டும். இதுவே எங்களின் கோரிக்கை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 5:43 pm
காசா குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது: பிரதமர் அன்வார்
February 5, 2025, 5:34 pm
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 3 திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளது: அஹமத் மஸ்லான்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm