நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவினர் நஜிப்பிற்காக நடத்திய சிறப்பு பிரார்த்தனைக்கு இடம் கொடுத்ததில் என்ன தவறு?: டான்ஸ்ரீ நடராஜா கேள்வி

பத்துமலை:

மஇகாவினர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்காக நடத்திய   சிறப்பு பிரார்த்தனைக்கு இடம் கொடுத்ததில் என்ன தவறு உள்ளது.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா இக் கேள்வியை எழுப்பினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும் என மஇகாவின் ஏற்பாட்டில் பத்துமலையில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு எல்லாம் ஏன் பத்துமலை நிர்வாகம் இடம் கொடுக்கிறது என சமூக ஊடகங்களில் எங்களை கடுமையாக சாடுகின்றனர்.

பத்துமலை என்பது பொதுவான இடம். இங்கு யாருக்கும் தடை விதிக்க முடியாது.

ஹிண்ட்ராப் உட்பட பல அரசியல் சார்ந்து நிகழ்வுகள் பத்துமலையில் நடந்துள்ளது.

அதே வேளையில் டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக இருந்த போதும் இல்லாத போதும் பல முறை பத்துமலைக்கு வந்துள்ளார். குறிப்பாக பத்துமலையின் மேம்பாட்டிற்காக நிதியும் வழங்கியுள்ளார்.

அப்படிப்பட்ட ஒருவருக்காக நடத்தப்படும் பிரார்த்தனைக்கு இடம் கொடுப்பதில் என்ன தவறு உள்ளது?

வாயும் சமூக ஊடகமும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டாம்.

அப்படி பேசினாலும் நான் கவலைப்பட போவது இல்லை. என் பணி தொடரும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset