செய்திகள் மலேசியா
வீட்டுக் காவல் தொடர்பான நஜிப்பின் நீதித்துறை மறுஆய்வைக் கூட்டரசு நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய மனு தாக்கல் செய்துள்ளது
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பது தொடர்பான முயற்சியில் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி அளித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் சட்ட தெளிவு தேவை என்பதைச் சுட்டிக் காட்டி நேற்று அரசு மனு தாக்கல் செய்திருப்பதைச் சட்டத்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு மூன்று நீதிபதி கொண்ட குழுவிற்கு இடையே சட்டத்தின் மாறுபட்ட விளக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பிளவுபட்ட தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்டது.
அதனால் இதை கூட்டரசு நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளது.
இந்த வழக்கில் நீதியை உறுதி செய்வதற்கு மட்டுமல்லாமல், சட்டத்தின் ஆட்சியின் கொள்கையை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து தரப்பினரின் நலனுக்காக விளக்கத்தை தெளிவுபடுத்துவதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம், ஒரு பிளவு தீர்ப்பில், முன்னாள் பேரரசரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்ற அரசாங்கத்தை வலியுறுத்திய நஜிப் தனது நீதித்துறை மறுஆய்வைத் தொடர அனுமதி அளித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 5:52 pm
குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலை விதியை பிரதமர் காப்பாரா?: டத்தோ கலைவாணர் கேள்வி
February 5, 2025, 5:43 pm
காசா குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது: பிரதமர் அன்வார்
February 5, 2025, 5:34 pm
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 3 திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளது: அஹமத் மஸ்லான்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm