நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஸாவை எடுத்து கொள்ளும் டிரம்ப்பின் முடிவு: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் 

கோலாலம்பூர்: 

காஸா பகுதியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். 

அவரின் இந்த கூற்று தொடர்பாக பாலஸ்தீன மக்களின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என்றூ முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா கூறினார். 

டிரம்ப்பின் இந்த திட்டமானது உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் மீது தொடுக்கப்படும் போராக உள்ளதாக அவர் சாடினார். 

அதனால் பாலஸ்தீன மக்களின் எதிர்காலம் குறித்து மக்களவை, மேலவை ஆகிய இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

காஸா பகுதியை வளர்ச்சியடைந்த பகுதியாகவும் வேலை வாய்ப்பு உருவாக்கும் பகுதியாகவும் அமெரிக்கா உருவாக்கவிருப்பதாக டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டு உலக நாடுகளை ஆச்சிரியமடைய செய்தார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset