
செய்திகள் இந்தியா
இந்திய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறை பிரச்னையா? புகார் அளியுங்கள்: அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
புதுடெல்லி:
தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அவை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கூறினார்.
மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழங்கிய தகவலைக் கொண்டு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளுக்கு அருகில் கழிவறைகளைக் கட்டுவதைப் பொறுத்தவரை, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகளில் கழிவறை உள்ளிட்டவை தொடர்பாக ஏதாவது பிரச்னை இருந்தால் அது பற்றி புகார் அளிக்க ராஜமார்க் யாத்ரா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒன் செயலியில் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள 1,300 கழிவறைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுங்கச்சாவடிகளை நடத்தவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அமைப்புகளிடம் கழிவறைகளின் தூய்மை தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. உரிய கழிவறை வசதிகளை செய்து தராத அமைப்புகளிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாதத்துக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். அவ்வகையில் இதுவரை ரூ. 46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளை நடத்தவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அமைப்புகளிடம் கழிவறைகளின் தூய்மை தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. உரிய கழிவறை வசதிகளை செய்து தராத அமைப்புகளிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாதத்துக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். அவ்வகையில் இதுவரை ரூ. 46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 58 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் மத்திய பிரதேசம் (48), குஜராத் (45), உத்தர பிரதேசம் (44), பஞ்சாப் (35), ஆந்திர பிரதேசம் (34) என்ற எண்ணிக்கையில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்று சிவராஜ் சிங் சௌஹான் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகளில் கட்டணங்கள் வசூலிக்கும் டோல் சாவடிக்காரர்கள் கழிவறைகளை சரிவர பராமரிப்பதில்லை என்று சாலைகளை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm