
செய்திகள் கலைகள்
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம்: டிக்கெட் முன்பதிவில் மலேசியா சாதனை
கோலாலம்பூர்:
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் நாளை மறுநாள் பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது
மலேசியாவில் விடாமுயற்சி திரைப்படத்தை 3DOT MOVIES வாங்கி வெளியீடு செய்கிறார்கள்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முந்தைய டிக்கெட் விற்பனை ஜனவரி 31ஆம் தேதி இயங்கலையில் தொடங்கியது
அன்று தொடங்கி இன்று வரை விடாமுயற்சி படத்தின் டிக்கெட் விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மலேசியாவில் முந்தைய டிக்கெட் விற்பனையில் 5 லட்சம் ரிங்கிட்டை வசூலித்துள்ளதாக 3 DOT MOVIES தனது சமூக ஊடகத்தில் தெரிவித்தது
THE KING OF OPENING என்று வர்ணிக்கப்படும் நடிகர் அஜித்குமாருக்கு மலேசியாவில் அதிகப்படியான ரசிகர் வட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது
2023ஆம் ஆண்டு வெளியான துணிவு படத்திற்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படம் வெளியாகிறது
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தைத் தயாரித்துள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
June 26, 2025, 2:27 pm