நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் காலத்தில் பி40, எம்40 பிரிவினருக்கு மட்டும் இலவச டோல் கட்டணச் சேவை வழங்கப்படலாம்: ஃபோம்கா 

கோலாலம்பூர்: 

பாடு தரவுத் தளத்தின் மூலம், பி40, எம்40 போன்ற குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு மட்டும் இலவச டோல் கட்டணச் சேவை வழங்கப்படும் புதிய வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியப் பயனீட்டாளர்  சங்கங்களின் கூட்டமைப்பு, ஃபோம்கா தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் தி.சரவணன் கூறினார். 

இன்று பெருநாள் காலங்களில் இனி இலவச டோல் கட்டணச் சேவை வழங்கப்படாது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

பாடு தரவுத் தளத்தின் மூலம் உண்மையிலேயே தகுதியுள்ளவர்கள் மட்டுமே பலன்களைப் பெறுவதை உறுதிசெய்யப் பயன்படுத்தப்படலாம் என்றார் அவர். 

இந்த நடவடிக்கையை செயல்படுத்துவது குறித்து சில எதிர்பார்ப்புகள் உள்ளன.

கடந்த ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக பணிகள் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறியதாக கூறப்படுகிறது.

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், நெரிசல் இல்லாத நேரங்களில் டோல்  கட்டணச் சலுகைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று சரவணன் கூறினார்.

இந்த நடவடிக்கை உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு நன்மைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset