செய்திகள் மலேசியா
28 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பது எல்சிஎஸ் கப்பல் போன்று சிக்கலை ஏற்படுத்தலாம்: ஹம்சா
கோலாலம்பூர்:
28 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பது எல்சிஎஸ் கப்பல் போன்று சிக்கலை ஏற்படுத்தலாம்
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை மக்களவையில் கூறினார்.
15 ஆண்டுகளுக்கு 16.6 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 28 AW139 ஹெலிகாப்டர்களை குத்தகைக்கு எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்முயற்சியில் ஒரு புதிய ஊழல் இருப்பதாக சந்தேகப்படுகிறது.
காரணம் இதன் மூலம் மீண்டும் யாரோ பணம் சம்பாதிப்பதாக ஒரு செய்தி தமக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த ஊழலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ஏற்கெனவே தேசிய பாதுகாப்பு சொத்தான லிட்டோரல் காம்பாட் ஷிப் (LCS) கப்பலை கட்டமைக்கும் விவகாரம் சர்ச்சையில் உள்ளது.
இந்த சிக்கலை போன்று 28 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்கும் விவகாரத்திலும் நிகழக்கூடாது.
குறிப்பாக வாழைப்பழம் இரண்டு முறை பழம் கொடுக்காது என தாம் நம்புவதாக ஹம்சா மக்களவையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 4, 2025, 6:55 pm
ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: வோங்
February 4, 2025, 6:53 pm
தாய்லாந்து போலிசாரை சுட்டுக் கொன்ற 2 சந்தேக நபர்கள் மலேசியாவில் இல்லை: ஐஜிபி
February 4, 2025, 6:52 pm
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளம் மந்திரிவாதி கைது: போலிஸ்
February 4, 2025, 6:51 pm