செய்திகள் மலேசியா
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
கோலாலம்பூர்:
அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கத்திற்குக் காத்திராமல், சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக உறவைக் கட்டியெழுப்ப மலேசியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இதனை கூறினார்.
கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிரான கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதைக் குறிப்பிட்ட அவர்,
வர்த்தக உறவை மேம்படுத்த அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு மலேசியா காத்திருந்தால் அது நாட்டுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
பல புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், வரிவிதிப்பை எதிர்கொள்வதில் மலேசியா அவசரம் காட்டக் கூடாது.
வர்த்தகப் பங்காளிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கத் தேவையான ஊக்கமான செயல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 2:41 pm
268-ஆவது ஆட்சியாளர்கள் கூட்டத்திற்கு கெடா சுல்தான் தலைமை தாங்கினார்
February 5, 2025, 1:25 pm
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது: லோக்
February 5, 2025, 12:06 pm
சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்: ஃபுசியா சாலே
February 5, 2025, 11:34 am
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 9:59 am