நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

காங்கோ ஜனநாயகக் குடியரசில்  ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் கீழ் பணியாற்றும் மலேசிய அமைதி காக்கும் படையினர் பாதுகாப்பாக உள்ளனர்.

வெளியுறவு அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து பாதுகாப்பு நிலைமையை அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

அதே வேளையில் நமீபியாவில் உள்ள மலேசிய தூதரகத்துடன் அமைச்சு இணைந்து செயல்படுகிறது. இது டிஆர்சிக்கு அங்கீகாரம் பெற்றது.

அதே நேரத்தில் தற்காப்பு அமைச்சு நிலைமையை மதிப்பிட்டு நாட்டில் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு பயணிக்கத் திட்டமிடும் மலேசியர்கள், பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை தங்கள் திட்டங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset