நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் காலங்களில் மட்டுமே டோல் கட்டணச் சேவைக்கு 50% தள்ளுபடி: அலெக்சாண்டர் நந்தா லிங்கி

செக்கின்சான்:

2025-ஆம் ஆண்டு பெருநாள் காலங்களில் மட்டுமே டோல் கட்டணச் சேவைக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று பொதுப்பணிதுறை அமைச்சர்  டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

இது அரசாங்கத்தின் முந்தைய கட்டணமில்லா முயற்சியை மாற்றுவதற்கான ஒரு வழிமுறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலை நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்குவதில் அரசாங்கம் ஏற்படுத்தும் செலவுகளை இந்த நடவடிக்கை குறைக்கும் என்று அவர் தெரிவித்தார். 

100% இலவச டோல் கணச் சேவை வழங்கினால் அரசு ஒவ்வொரு ஆண்டும் 160 மில்லியனைச் செலவிட நேருகிறது.

அதனை 50 விழுக்காடாகக் குறைக்கும் போது அக்கட்டணம் 80 மில்லியனாக உள்ளது. 

இவ்வாண்டு சீன புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் 50 சதவீத கட்டண தள்ளுபடி அங்கீகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதன் பிறகு அனைத்துப் பெருநாள் காலங்களில் ஆண்டு முழுவதும் இதைத் தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

சுங்கக் கட்டணத் தள்ளுபடிக்கான செலவை நெடுஞ்சாலை சலுகை நிறுவனங்கள் அல்ல. பொது நிதியைப் பயன்படுத்தி அரசாங்கமே ஈடுகட்டியது என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, பண்டிகைக் காலங்களில் கட்டணமில்லா திட்டத்திற்குப் பதிலாக பொதுமக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் அணுகுமுறையை மதிப்பாய்வு செய்து வருவதாக நந்தா கூறியிருந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset