நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: வோங்

கோலாலம்பூர்:

ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை  குறைந்துள்ளது.

கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இதனை கூறினார்.

இந்த எண்ணிக்கை கடந்தாண்டு 13,007 ஆகக் குறைந்துள்ளது.

ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 21,748ஆக பதிவானது.

கடந்த ஆண்டில் பதிவான எண்ணிக்கையில் 2,873 பேர் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

இதில் 883 பேர் ஆரம்பப் பள்ளி, 1,990 பேர் இடைநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களாவர்.

அனைத்து மட்டங்களிலும் பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும், மேலும் விரிவான சிறப்பு மாதிரிப் பள்ளிகள் கே9,  கே 11 பள்ளிகளை மேலும் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று ரந்தாவ் பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி ஜைலா முகமட் யூசோஃப்  மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த துணையமைச்சர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset