நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா

கோலாலம்பூர்:

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

1959 ஆம் ஆண்டு கல்வி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளபடி கடுமையான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, தலைமை ஆசிரியர் அதிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியரால் மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்க முடியும்.

தற்போதுள்ள சட்ட விதிகள், பிரம்படி உள்ளிட்ட குற்றங்களைச் செய்யும் மாணவர்கள் மீது உடல் ரீதியான நடவடிக்கை எடுக்க பெற்றோருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அதிகாரம் அளிக்கவில்லை.

மேலும் சிறப்பு சுற்றறிக்கை கடிதம் எண் 2இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, பொது இடங்களில் அல்லது பள்ளி ஒன்றுகூடல் இடங்களில் ஒருபோதும் பிரம்படி தண்டனை வழங்கப்படக்கூடாது.

அதே வேளையில் அத்தண்டனையை பெண் மாணவர்களுக்குப் பயன்படுத்த முடியாது.

கடுமையான குற்றங்களைச் செய்யும் மாணவர்கள் மீது விதிக்கப்படும் தண்டனைகளில் ஒன்று பிரம்படி. 

ஆனால் இந்தத் தண்டனை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கம் கொண்டதல்ல. 

மாறாக, மாணவர்களைப் புரிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டும், ஒழுங்குபடுத்தும் ஒரு கல்வி முறையாகச் செயல்படுகிறது என்று அவர் மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset