நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர்  தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி

கோலாலம்பூர்:

பிரதமர்  தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது என்று பிஎஸ்எம் கட்சி துணைத் தலைவர் அருட்செல்வன்  கேள்வி எழுப்பினார்.

ஊழல் மோசடிகளை அமலாக்க நிறுவனங்களுக்குப் பதிலாக ஊடகங்களுக்கு அம்பலப்படுத்திய தகவல் வெளியிடுபவர்கள் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அசாலினாவின் அறிக்கையை அவர் விமர்சித்தார்.

தகவல் அளிப்பவர் முதலில் எம்ஏசிசி அணுகும்போது மட்டுமே எம்ஏசிசி, அரசாங்கம் ஒரு வழக்கை விசாரிக்கும்.

மேலும் அதிகாரிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே அது உண்மையாகவும் பாதுகாப்பிற்கு தகுதியானதாகவும் கருதப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அப்படி என்றால் ஒருவேளை பிரதமர் அல்லது எம்ஏசிசி தலைமை ஆணையர் மீது ஊழல் அல்லது கடுமையான தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?

பாதுகாப்பு கோருவதற்கு முன்பு அவர்கள் தங்கள் எல்லா ஆதாரங்களையும் இந்த நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அர்த்தமாக்குமா.

அது ஒரு அபத்தமான பரிந்துரை இல்லையா  என்று  அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக நேற்று, தகவல் தெரிவிப்பவர்கள் பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 711)-ஐ திருத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அசாலினா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

இது, அமலாக்க அதிகாரிகளிடம் அறிக்கை அளிப்பதற்கு முன்பு தகவல் தெரிவிப்பவர்கள் ஊடகங்களை அணுக அனுமதிக்கும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset