நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேருந்து ஓட்டுநர்கள் எச்சில் துப்பினால் அல்லது புகைப்பிடித்தால் 300 வெள்ளி அபராதம்: பேராக் சாலை போக்குவரத்து துறை 

ஈப்போ:

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேராக் சாலை போக்குவரத்து துறை, JPJ நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, ஓட்டுநர்கள் எச்சில் துப்புவது அல்லது ஓட்டும் நேரத்தில் புகைப்பிடிப்பது தொடர்பில் 300 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

ஓட்டுநர்கள் இவ்வாறு நடந்து கொள்வது வெறுக்கத்தக்கது.

ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முழுமையாக தங்களது பணியில் கவனம் செலுத்த வேண்டும் என பேராக் JPJ இயக்குநர் முகமட் யூசுப் அபுஸ்தான் கூறினார்.

பயணத்தின் போது எச்சில் துப்பும் செயல் மிகவும் தவறானது.  இது பின்னால் வருபவர்களுக்கு கடும் சங்கடத்தை உண்டாகும்.

ஏதேனும் ஓட்டுநர்கள் எச்சில் துப்பியதாக பிடிபட்டால், 1959 சாலை போக்குவரத்து விதிகள் (Rule 52) படி RM300 அபராதம் விதிக்கப்படும்,” என அவர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) ஜாலான் தம்பூனில் நடைபெற்ற சீன புத்தாண்டு சிறப்பு இருசக்கர வாகன நடவடிக்கையின் போது தெரிவித்தார்.

மேலும், ஓட்டுநர்கள் பயண நேரத்தில் புகைப்பிடித்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“பேருந்து ஓட்டுநர்கள் விதிகளை மீறுகிறார்களா என்பதை கண்காணிக்க ஜேபிஜே அதிகாரிகள் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஓட்டுநர்கள் இந்த நடைமுறையை எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது, அவர்கள் கைப்பேசி பயன்படுத்தவோ அல்லது பிற குற்றங்களைச் செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் பேருந்தில் இருந்தவாரே கண்காணிப்பார்,” என்று அவர் கூறினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset