நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டதை முழுமையாக ஆதரிக்கிறேன்: பிரதமர்

டாவோஸ்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி SRC வழக்கில் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நஜிப் ரசாக்கிற்கு எதிரான தண்டனைக் குறைக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன்.

நஜிப் சிறையில் என்னைப் போல துன்பப்படுவதை விரும்பவில்லை. நானும் அந்த நரகத்தையும், தனிமைச் சிறையையும் கடந்து வந்தேன். 

சிறைச்சாலை உணவைத் தவிர வேறு எந்த உணவும் எனக்குக் கொடுக்கப்படவில்லை. 

ஆனால் நான் நஜிப்பை அதே வழியில் நடத்த வேண்டுமா? என்றால் அதை நான் ஆதரிக்க மாட்டேன் என்று பிரதமர் கூறினார்.

முன்னதாக 71 வயதான நஜிப் எஸ்ஆர்சி  நிதியில்  42 மில்லியன் ரிங்கிட்டை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset