நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பத்துமலை இந்திய கலாச்சார மையம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது

பத்துமலை:

ஆயிரக்கணக்கான மக்கள் பத்துமலை திருத்தலத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மையம் இன்று அதிகாரப்பூர்வமாக திறப்புவிழா கண்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில்  இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கலாச்சார மையத்தை ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்  ஆகியோர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்த இந்திய கலாச்சார மையத்தில் நமது பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் இந்திய இசைக் கருவிகளான மிருதங்கம்,  வயிலின்,  தபேலா உட்பட அனைத்து கருவிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்த தெய்வ சிலைகளும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது.

அதே வேளையில் இந்தியர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் பாரம்பரியத்தை படம் பிடித்து காட்டும் வகையில் பத்துமலை திருத்தலத்தில் இந்த கலாச்சார மையம் அமைத்துள்ளது.

இம்மையத்தை அமைத்த டான்ஸ்ரீ நடராஜா, தேவஸ்தான நிர்வாகத்தை பெரிதும் பாராட்டுவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமதுரையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset