செய்திகள் மலேசியா
சீன புத்தாண்டை சோகத்தில் வரவேற்ற தாய்–மகள்: தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்
பட்டர்வொர்த்:
சீன புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய நிலையில் இருந்த தாயும் மகளும், இன்று ஏற்பட்ட தீ விபத்தால் துயரமான தருணங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். பட்டர்வொர்த் தாமன் பகான் லாலாங் பகுதியில் உள்ள அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பற்றியதில் பண்டிகைக்கான அனைத்து பொருட்களும் சேதமடைந்தன.
காலை 7.36 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன என்று பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் ஜான் சேகன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
"சம்பவ இடத்தை அடைந்தபோது, முதல் மாடியில் உள்ள 120 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அடுக்குமாடி வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அங்கு வசித்த பெண்ணும் அவரது மகளும் தீ ஏற்பட்டதை உணர்ந்த உடனே பாதுகாப்பாக வெளியேறினர்.
"காலை 8.06 மணிக்குள் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சுமார் 35 நிமிடங்களில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. மீண்டும் தீ ஏற்படாத வகையில் சோதனை, சுத்திகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பவ இடம் தீ விசாரணை குழுவிடம் (FIO) ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் டாங் ஜூ சின் (53), அவரது 16 வயது மகள் என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 18, 2026, 12:35 pm
மின்கம்பி திருட்டில் ஈடுப்பட்ட நால்வரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
February 18, 2026, 12:33 pm
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து: ஏழு வீடுகள் சாம்பல்
February 18, 2026, 11:57 am
விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகத் தனித்து வாழும் தாய்க்கு RM 2500 அபராதம்
February 18, 2026, 11:55 am
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 3 எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர்கள்
February 18, 2026, 11:53 am
சபாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
February 18, 2026, 11:51 am
போலி டெண்டர் மோசடி: ஒப்பந்ததாரருக்கு RM1.08 லட்சம் இழப்பு
February 18, 2026, 11:44 am
முதியவர் வீட்டில் பட்டாசு வீசிய மூன்று இளைஞர்கள் கைது
February 18, 2026, 11:41 am
நால்வரை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டவர்: ‘அவர் நல்ல மனிதர், நட்பானவர்’ – அண்டைவீட்டினர் உருக்கம்
February 18, 2026, 11:39 am
