நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதியவர் வீட்டில் பட்டாசு வீசிய மூன்று இளைஞர்கள் கைது

சிரம்பான்: 

தாமான் செனாவாங் ஜெயா பகுதியில் வசிக்கும் ஒரு முதியவரின் வீட்டில் பட்டாசுகளை வீசியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் விசாரணைக்கு உதவ நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

14 முதல் 16 வயதுக்குட்பட்ட அந்தச் சந்தேக நபர்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என சிரம்பான் மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் அஜஹார் அப்துல் ரஹீம் தெரிவித்ததார்.

“வீட்டு உரிமையாளர் நேற்று மதியம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு சிரம்பான் சுற்றுவட்டார பகுதியில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

“1957 ஆம் ஆண்டின் வெடிப்பொருள் சட்டம், பிரிவு 8-ன், அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருத்தல் அல்லது வெடிக்கச் செய்தல் எனும் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என அவர் தெரிவித்தார்.

நேற்று சமூக ஊடகங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து தாமான் செனாவாங் ஜெயா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல பட்டாசுகளை வீசிய மூன்று சந்தேக நபர்களைப் போலீசார் தேடி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு 8.12 மணியளவில் நடந்தது என்பது தெரியவந்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset