நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகத் தனித்து வாழும் தாய்க்கு RM 2500 அபராதம்

மலக்கா:

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் தனித்து வாழும் தாய் ஒருவருக்கு நேற்று ஆயர் கெரோ நீதிமன்றம் RM2,500 அபராதம் விதித்துள்ளது. 

பண்டமாரான் ஜெயாவைச் சேர்ந்த 46 வயதான அஸ்வானா சுலைமான், மஜிஸ்திரேட் உஸ்மான் அப்துல் கனி முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றவாளி மீது குற்றச் சட்டம் பிரிவு 372B-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும். 

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இரவு 8.05 மணியளவில், ஜாலான் பெர்சிசிரான் பூங்கா ராயா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் விபச்சாரத்திற்காக வாடிக்கையாளர்களைத் தேடியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

 மலாக்கா மாநில காவல் தலைமையகத்தின் D7 குற்றவாளிக் குழுக்கள், ஒழுக்கக்கேடு, சூதாட்டம் பிரிவின் அதிகாரிகள் 'WeChat' செயலியில் பாலியல் சேவை வழங்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் போலீசார் ஒரு அறையில் சோதனை நடத்தியபோது, ஒரு மையூட்டி குழாய், மூன்று கண்டோம், திசு பேப்பர், கைப்பேசி, ஈரத் துணி, பாலியல் தூண்டி சாதனம், RM350 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கில் துணை அரசு வழக்கறிஞர் ஷௌகி மார்டியா பஹாருதீன் ஆஜரானார். குற்றவாளியின் தரப்பில் வழக்கறிஞர் நைஜல் தாய் ஆஜராகி, அவர் ஒரு தனித்தாய் என்றும், உணவகத்தில் பணியாற்றி வருவதாகவும், கல்லூரியில் படிக்கும், SPM முடிவுக்காக காத்திருக்கும் குழந்தைகள் உட்பட நான்கு பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய நிலை உள்ளதால், குறைந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset