நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி டெண்டர் மோசடி: ஒப்பந்ததாரருக்கு RM1.08 லட்சம் இழப்பு

பெசுட்:

போலி டெண்டர் சலுகையால் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர் ஒருவர் RM107,995 இழப்பைச் சந்தித்துள்ளார்.

 பெசுட் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு (PPD) பயன்படுத்தப்படும் மின்சார ஜெனரேட்டர் இயந்திரங்களை வழங்கும் சேவை டெண்டர் என கூறி வழங்கிய சலுகையால் 47 வயதுடைய ஆடவர் ஒருவர் ஏமாற்றப்பட்டதாக நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் மொத்தம் RM107,995 மதிப்புள்ள ஐந்து ஜெனரேட்டர் இயந்திரங்களை வாங்க ஒப்புக்கொண்டதாகப் பெசுட் மாவட்ட காவல் துறை தலைவர், சூப்பிரிண்டெண்ட் முஹம்மத் ரோசைமே அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

“அவர் பிப்ரவரி 10 முதல் 12 வரை ஒரு உள்ளூர் நிறுவனத்தின் வங்கிற்கு ஐந்து முறை பண பரிவர்த்தனைச் செய்துள்ளார். பின்னர் PPD பெசுட் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உறுதி செய்தபோது, அத்தகைய டெண்டர் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

“இதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றம் குற்றவியல் சட்டம் பிரிவு 420ன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் விதிக்கப்படலாம்,” என்றார் அவர்.

மேலும், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்றி வழங்கப்படும் டெண்டர் அல்லது திட்டச் சலுகைகளை எளிதில் நம்பாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், வணிகக் குற்ற விசாரணை துறையின் சேனல்கள், குறிப்பாக தேசிய மோசடி மறுமொழி மையம் (NSRC) ஆகியவற்றைப் பயன்படுத்தி மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset