நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிற்சாலை பெண் ஊழியர் விபத்தில் உயிரிழப்பு: சாட்சிகளைப் போலீஸ் தேடுகிறது

சுங்கை பெட்டானி: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுங்கை பட்டாணி–கோலா கெத்தில் சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தச் சம்பவம் தொடர்பாகச் சாட்சிகள், தகவல் உள்ள பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என போலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விபத்தில் கோத்தா சாராங் செமுட் பகுதியைச் சேர்ந்த 21 வயதான உயிரிழந்த பால்கிஸ் நதாச்யா ஹபிபுல்லா என்ற பெண் ஒரு தொழிற்சாலை ஊழியர் ஆவார் என்று கோலா மூடா மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் கூறினார்.

இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7.50 மணியளவில், கோலா கெட்டிலில் இருந்து சுங்கை பெட்டானி நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை உட்படுத்தி நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

“ஆரம்பக்கட்ட விசாரணையின் படி, சம்பவ நேரத்தில் பாதிக்கப்பட்டவர் நேராகச் சென்றுகொண்டிருந்தார். விபத்து நடந்த இடத்தை அடைந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறம் வழுக்கி விழுந்ததாக நம்பப்படுகிறது.

தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காகச் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு (HSAH)  அனுப்பப்பட்டது,” என்றார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவக்கூடிய தகவல் உள்ளவர்கள், அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திலும் தகவல் அளிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset