செய்திகள் மலேசியா
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 3 எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர்கள்
கோத்தா பாரு:
2026 சீன புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்கீழ் மலேசிய போக்குவரத்துதுறையும் (JPJ), தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமும் (AADK) இணைந்து மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், மூன்று எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று வழக்குகளில் இரண்டு சிரம்பான் நகரிலும் ஒன்று மலாக்கா நகரிலும் பதிவாகியுள்ளதாக JPJ செயல்பாட்டு பிரிவின் துணை தலைமை இயக்குநர், டத்தோ ஜாஸ்மானி ஷஃபாவி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் 38 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக AADK-க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“இந்தச் சோதனைகள் 'Ops TBC 2026' நடவடிக்கை முடிவடையும் வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
'Lembah Sireh' பேருந்து நிலையத்தில் நடைபெற்ற 'Ops TBC 2026' ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த எட்டு நாட்களில் மொத்தம் 4,242 பேருந்துகள் டெப்போவிலும் பேருந்து நிறுத்தும் நிலையங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“அதில் 779 ஆய்வு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, சட்ட விதிமுறைகளை மீறிய இரண்டு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“மேலும், சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, பயணிகளாகச் சென்று ஆய்வு செய்யும் ரகசிய நடவடிக்கைகளையும் JPJ மேற்கொண்டு வருகிறது.
“அனைத்து பேருந்துகளும் பாதுகாப்பான நிலையில் இயங்கி, தொழில்நுட்ப தரநிலைகள், இயக்க உரிம நிபந்தனைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம்,” என அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 18, 2026, 12:35 pm
மின்கம்பி திருட்டில் ஈடுப்பட்ட நால்வரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
February 18, 2026, 12:33 pm
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து: ஏழு வீடுகள் சாம்பல்
February 18, 2026, 11:57 am
விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகத் தனித்து வாழும் தாய்க்கு RM 2500 அபராதம்
February 18, 2026, 11:53 am
சபாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
February 18, 2026, 11:51 am
போலி டெண்டர் மோசடி: ஒப்பந்ததாரருக்கு RM1.08 லட்சம் இழப்பு
February 18, 2026, 11:46 am
சீன புத்தாண்டை சோகத்தில் வரவேற்ற தாய்–மகள்: தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்
February 18, 2026, 11:44 am
முதியவர் வீட்டில் பட்டாசு வீசிய மூன்று இளைஞர்கள் கைது
February 18, 2026, 11:41 am
நால்வரை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டவர்: ‘அவர் நல்ல மனிதர், நட்பானவர்’ – அண்டைவீட்டினர் உருக்கம்
February 18, 2026, 11:39 am
