நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025இல் 4 புதிய திட்டங்களை இலக்காக கொண்டு  மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் செயல்படவுள்ளது: டத்தோ இப்ராஹிம் ஷா

கோலாலம்பூர்:

இவ்வாண்டு  4 புதிய திட்டங்களை இலக்காக கொண்டு மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் செயல்படவுள்ளது.

அந்நிறுவனத்தின் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா இதனை கூறினார்.

புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்  சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

நிர்வாக சீரமைக்கு பின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இதனால் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 16,0000த்தை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இவ்வாண்டு புதிய கட்டடம் வாங்குவது, காப்புறுதி, விவசாயம், சுற்றுலா ஆகிய 4 புதிய திட்டங்களை மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்  கொண்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நிறுவனத்தின் 33ஆவது ஆண்டுக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இத்திட்டங்கள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் நிர்வாக கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கெடா, பெர்லிஸ் மாநிலங்களுக்கு தேவாடு, பினாங்கிற்கு நாராயணசாமி, பேராக்கிற்கு மோகன், சிலாங்கூருக்கு செல்வக்குமார், கூட்டரசுப் பிரதேசத்திற்கு ஜோய்ல் ஹாரிசோன், பகாங், கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கு கதிரேசன், நெகிரி செம்பிலானுக்கு சத்தியராஜ், ஜொகூர், சபா, சரவாக்கிற்கு தேவராஜூ, மலாக்காவிற்கு சைமன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset