செய்திகள் மலேசியா
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது: லோக்
புத்ராஜெயா:
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டது. போக்குவரத்துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் பங்கு பரிவர்த்தனைகளில் 500 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொதுக் கணக்குக் குழு தன்னை விசாரணைக்கு அழைத்த நடவடிக்கை குறித்து பல கேள்வி எழுகிறது. குறிப்பாக இது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அதே வேளையில் பிஏசி தலைவர் டத்தோ மாஸ் எர்மியேதி சம்சுதினின் அறிக்கையை பார்க்கும்போது, நான் ஜசெகவைச் சேர்ந்த அமைச்சர் என்பதால், எனக்கு எதிராக எதிர்மறையான கருத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என்று அந்தோனி லோக் கூறினார்.
மாஸ் எர்மியேதி மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் குழப்பத்தில் இருப்பது போல் இது ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்றும் அது போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருக்குப் புரியவில்லையா அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ள விரும்பவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை.
இந்தப் பிரச்சினையை போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைக்க அவர் முயற்சிக்கிறார்.
இதில் அரசியல் நோக்கம் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.
ஏனென்றால் போக்குவரத்து அமைச்சர் ஜசெகவைச் சேர்ந்தவர். எனவே அவர் ஜசெகவை குறை கூற விரும்புகிறார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm
ஏப்ரல் மாதம் ஆண்டின் மிக வெப்பமான மாதமாக இருக்கலாம்: மெட்மலேசியா எச்சரிக்கை
February 5, 2025, 3:17 pm
காஸாவை எடுத்து கொள்ளும் டிரம்ப்பின் முடிவு: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்
February 5, 2025, 2:41 pm