நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்: ஃபுசியா சாலே

பெட்டாலிங் ஜெயா: 

சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் பிகேஆர் கட்சித் தேர்தல் தேதி முரண்பட்டால் மட்டுமே அக்கட்சியின் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று பிகேஆர் பொதுச் செயலாளர் ஃபுசியா சாலே தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 2025-2028 தவணைக்கான அனைத்து மட்டங்களிலும் கட்சி தேர்தல்கள் வழக்கம் போல் தொடரும்  என்று மத்திய தலைமைத்துவக் குழு முடிவு செய்துள்ளது.

பிகேஆர் எம்பிபி, இளைஞர் மற்றும் மகளிர் பதவிகளுக்கான போட்டி மே 24-ஆம் தேதி அன்று நடைபெறும்.

அதே நேரத்தில் பிரிவு அளவிலான தேர்தல்கள் ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெற உள்ளன.

ஒரு வேளை சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset