நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி புத்தக பற்றுச்சீட்டை ஆசிரியர்களுக்கும் விரிவாக்கம் செய்ய கல்வியமைச்சு பரிந்துரை: ஃபட்லினா சிடேக் தகவல் 

கோலாலம்பூர்: 

மடானி புத்தக பற்றுச்சீட்டை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனும் பரிந்துரையை மலேசிய கல்வி அமைச்சு எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் கொண்டு வரும் என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார் 

புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த மடானி புத்தக பற்றுச்சீட்டு வழங்கும் திட்டம் 100 விழுக்காடு வெற்றிக்கரமாக அமைந்த நிலையில் இந்த பரிந்துரை முன்மொழியப்பட்டுள்ளது 

பள்ளி மாணவர்களும் இல்லாமல் ஆசிரியர்களும் இந்த வசதிகளைப் பெற வேண்டும் என்று அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக அமைச்சர் கருத்துரைத்தார் 

ஆக, மடானி புத்தக பற்றுச்சீட்டை ஆசிரியர்களுக்கு விரிவாக்கம் செய்யும் பரிந்துரை விவாதிக்கப்படும் என்று அமைச்சர் ஃபட்லினா சொன்னார் 

50 ரிங்கிட் மடானி புத்தக பற்றுச்சீட்டு நான்காம் ஆண்டு முதல் அதற்கும் மேல் உள்ள மாணவர்களுக்கும் 100 ரிங்கிட் மடானி புத்தக பற்றுச்சீட்டு இடைநிலைப்பள்ளி மாணவர்கள், மெட்ரிகுலேஷன், ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset