![image](https://imgs.nambikkai.com.my/IMG-20250117-WA0250.jpg)
செய்திகள் மலேசியா
பெர்னாமா தமிழ்ச் செய்திகள் தயாரிப்பில் பார்வை கலந்துரையாடல் நிகழ்ச்சி
கோலாலம்பூர்:
அரசாங்கத்தின் தகவல்கள் மட்டுமின்றி இந்தியர்களின் நலன் சார்ந்தவற்றையும் உடனுக்குடன் ஒளிபரப்பி வரும் பெர்னாமா தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திகள், பார்வை எனும் தலைப்பில், புதிய கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தயாரிக்கவுள்ளது.
அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு சமூகம், பொருளாதாரம், கலை, விளையாட்டு உட்பட மேலும் பல சுவாரசியமான தலைப்புகள் இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் தலைப்பில் நிபுணத்துவம் பெற்ற சிறப்புப் பிரமுகர்கள் பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
தொகுப்பாளரோடு, AI தொழில்நுட்ப உதவியுடன் நெக்சா எனும் எந்திரனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதன் முத்தாய்ப்பாகும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆஸ்ட்ரோ அலைவரிசை 502-இல் இரவு மணி 7.30க்கு பெர்னாமா தமிழ்ச் செய்திக்குப் பின்னர் சுமார் அரை மணிநேரத்திற்கு ஒளிபரப்பப்படும் பார்வை நிகழ்ச்சியைக் கண்டு பயனுறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பெர்னாமா தமிழ்ச் செய்திகள் ஒவ்வொரு நாளும் இரவு மணி 7-க்கு ஆஸ்ட்ரோ அலைவரிசை 502-இல் ஒளிபரப்பாகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 5:43 pm
காசா குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது: பிரதமர் அன்வார்
February 5, 2025, 5:34 pm
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 3 திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளது: அஹமத் மஸ்லான்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm