செய்திகள் உலகம்
15 மாத இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறது: கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது
ஜெருசலேம்:
கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். இதேத் தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்தார்.
பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும், பாலஸ்தீனர்கள் மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருவதாக காஸா பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2023 நவம்பர் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் விடுவித்தது.
இஸ்ரேல் ராணுவம் கடந்த 15மாதங்களாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்திவரும் கொடூரத் தாக்குதலில் காஸாவில் 46,707 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 18, 2025, 11:05 pm
மலேசிய நேரப்படி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு காசா போர் நிறுத்தம் தொடங்குகிறது
January 18, 2025, 8:56 pm
இலங்கையில் இன்று இரவு முதல் இடியுடன் கூடிய பெருமழை: வானிலை மையம் எச்சரிக்கை
January 18, 2025, 4:39 pm
ஜம்இய்யத்துல் உலமா சபையினர் இலங்கை பிரதமர் இடையில் சந்திப்பு
January 18, 2025, 11:59 am
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக வீழ்ச்சி
January 18, 2025, 10:14 am
அமெரிக்காவில் டிக் டாக் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி: அமலுக்கு வருகிறது தடை
January 17, 2025, 12:18 pm
உலகின் ஆகப் பரபரப்பான 5 விமான நிலையங்கள் என்ன தெரியுமா?
January 17, 2025, 10:04 am
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை
January 16, 2025, 9:02 pm