செய்திகள் மலேசியா
50 ஆயிரம் ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கிய மலேசிய அரசுக்கு நன்றி: யுவராஜா குருசாமி
பத்துமலை:
மலேசியாவைச் சேர்ந்த 50 ஆயிரம் ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி இதனை கூறினார்.
பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் மகர ஜோதி திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
கிட்டத்தட்ட 60 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள் தங்களின் விரதத்தை பூர்த்தி செய்யும் விழாவாக இது அமைந்தது.
சபரிமலை போன்றே இங்கும் பத்துமலையிலிருந்து தங்க ஆபரணங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீ ஐயப்பசாமிக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டது.
அதன் பின் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்துமகர ஜோதியும் ஏற்றப்பட்டது.
கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட ஐயப்பசுவாமி பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஆண்டு மலேசியாவில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்துள்ளனர்.
இன்னும் பல பக்தர்கள் மகரஜோதி விழாவில் கலந்துகொள்ள சபரிமலைக்கு சென்றுள்ளனர்.
பக்தர்களுக்கு மலேசிய விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் முயற்சியின் வாயிலாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார்.
இதன் அடிப்படையில் இவ்வாண்டு சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் இந்த சிறப்பு சலுகைகளை பெற்றனர்.
குறிப்பாக விமான நிலையங்களில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக குடிநுழைவு சோதனைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் எளிதாக மேற்கொள்ளப்பட்டது. இது பக்தர்களுக்கு பெரும் பயனாக இருந்தது.
இவ்வேளையில் அரசாங்கத்திற்கு ஐயப்ப பக்தர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த ஆண்டு இந்த சலுகைகள் மேலும் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என நாங்கள் எதிர்பார்ப்பதாக யுவராஜா குருசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவில் ஐயப்ப பக்தர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதேபோன்று சபரிமலையில் ஏற்படும் சிக்கல்களுக்கும் உரிய தீர்வு காண மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 15, 2025, 4:44 pm
இவ்வாண்டு நாட்டில் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு: அந்தோனி லோக்
January 15, 2025, 12:50 pm
கொள்முதல் வழிமுறைகளை கேகே மார்ட் கடுமையாக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்
January 15, 2025, 12:48 pm
ஹலாலை உறுதி செய்து பொருட்களை வாங்கும் பிரச்சாரம் தொடங்கப்படும்: அக்மால் சாலே
January 15, 2025, 12:38 pm
இங்கிலாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்
January 15, 2025, 12:13 pm
சரஸ்வதி தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி - பாலர் பள்ளி நேர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது
January 15, 2025, 12:09 pm
மொஹைதின், ஹம்சா, துவான் இப்ராஹிம், சம்சூரி பிரதமராவதற்கு சிறந்த தேர்வாகும்: வான் அஹ்மத் பைசால்
January 15, 2025, 12:06 pm
மலேசியாவிற்கு டிஜிட்டல் மாற்றம் தேவை; பிளாக்செயின், கிரிப்டோகரன்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர்
January 15, 2025, 12:04 pm
சரவாக்கில் எரிவாயு விநியோக உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது: அபாங் ஜொஹாரி
January 15, 2025, 10:52 am