நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொள்முதல் வழிமுறைகளை கேகே மார்ட்  கடுமையாக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்

கோலாலம்பூர்:

கொள்முதல் வழிமுறைகளை கேகே மார்ட் இன்னும் கடுமையாக்க வேண்டும்.

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் இதனை கூறினார்.

கேகே மார்ட்டில் ஹலால் சின்னத்துடன் விற்கப்பட்ட ஹாம் சாண்ட்விச் விவகாரம் தற்போது நாட்டில் சர்ச்சையாகியுள்ளது.

இந்த ஹாம் சாண்ட்விச் மூன்றாம் தரப்பினர் தயாரித்துள்ளனர்.

அவர்கள் மோசடியாக ஹலால் சின்னம், கேகே மார்ட் சின்னம் இரண்டையும் அதன் பேக்கேஜிங்கில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் கேகே மார்ட் நிறுவனத்தின் கொள்முதல் பொறிமுறைக்கான நிலையான இயக்க நடைமுறைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

அதே வேளையில் கேகே மார்ட் வெறுமனே சப்ளையரைக் குறை கூறுவது போதாது என்று லீ கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset