நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இவ்வாண்டு நாட்டில் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு: அந்தோனி லோக் 

புத்ரா ஜெயா: 

இவ்வாண்டு நாட்டில் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், சர்வதேசப் பயணத் தேவை அதிகரிப்பு, வருமான அதிகரிப்பு போன்ற காரணங்களால் இவ்வாண்டு நாட்டில் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கணிக்கப்பட்டதை விட அதிகமாகும் என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார். 

அதனால் 2025-ஆம் ஆண்டில், மலேசியாவின் விமானப் போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மலேசியாவின் விமானப் பயணிகள் போக்குவரத்து 105.8 மில்லியன் முதல் 112.9 மில்லியன் பயணிகளை எட்டும் என்று மலேசியா வான் போக்குவரத்து நிறுவனம் கணித்துள்ளது. 

முந்தைய ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் விமான நிறுவனங்கள் தங்கள் திறனை 15.8 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று லோக் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset