நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதின், ஹம்சா, துவான் இப்ராஹிம், சம்சூரி பிரதமராவதற்கு சிறந்த தேர்வாகும்: வான் அஹ்மத் பைசால்

கோலாலம்பூர்:

மொஹைதின், ஹம்சா, துவான் இப்ராஹிம், சம்சூரி பிரதமராவதற்கு சிறந்த தேர்வாக உள்ளனர்.

பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மத் பைசால் இதனை கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளர்களாக ஆக்கப்பட வேண்டிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைக் கண்டுபிடிப்பதில் தேசிய கூட்டணிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

தேசிய கூட்டணிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை முன்வைத்து பின்னர் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படலாம்.

அதில் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின், டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின், துவான் இப்ராஹிம், சம்சூரி ஆகியோர் அந்த தேர்வாக இருக்கலாம்.

குறிப்பாக பிரதமராக பரிந்துரைக்க விரும்பும் ஒரு தலைவர் அரண்மனையுடன் நல்ல உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset