நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இங்கிலாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

லண்டன்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இங்கிலாந்திற்கு அதிகாரப்பூர்வமாக 5 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

அவர் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருடன் இன்று மலேசிய நேரப்படி இரவு 9 மணிக்கு எண் 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார்.

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தலைவராகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் நிலையில் இங்கிலாந்து மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்தச் சந்திப்பு நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

மேலும், இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு பிரச்சனைகள்,பாலஸ்தீனத்தின் நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, பிரதமருடன் சேர்ந்து முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் (MITI) செனட்டர் டத்தோஸ்ரீ தெங்கு சாஃப்ரூல் தெங்கு அப்துல் அஸிஸ்,உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர், தோட்டப்புற மூல தொழில்துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ ஜொஹரி அப்துல் கானி, இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான மலேசிய உயர் ஆணையர் டத்தோஸ்ரீ ஸாக்ரி ஜாஃபார் ஆகியோர் கலந்துக்கொள்ளுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- கௌசல்யா ரவி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset