நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ ஏரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம்: மலேசிய விமான நிலைய நிறுவனம் மீது அந்தோனி லோக் அதிருப்தி

புத்ரா ஜெயா: 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கேஎல்ஐஏ-வில் ஏரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்  மலேசிய விமான நிலைய நிறுவனம் மீது போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இந்த ஏரோ இரயில் திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் செயல்திட்டம் மலேசிய விமான நிலைய நிறுவனம் கீழ் உள்ளது. 

இந்தச் செயல்திட்டம் குறித்து தினசரி புகார்களைப் பெற்று வருவதாக அந்தோனி லோக் கூறினார்.

ஜனவரி 31-ஆம் தேதிக்குள் திட்டம் முடிவடையும் என்று மலேசிய விமான நிலைய நிறுவனம் முன்பு கூறியிருந்தாலும், ஒப்பந்ததாரர்களால் ஏரோ ரயில் அமைப்பு இன்னும் சோதிக்கப்படுவதாக லோக் இன்று கூறினார்.

மலேசிய விமான நிலைய நிறுவனத்தின் பல நடவடிக்கைகள் தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். 

தாம் பல கேள்விகள் எழுப்பினாலும் அதற்கு பதிலளிக்கப்படவில்லை  என்று லோக் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

விமான ரயில்கள் இன்னும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன, சோதனைகள் எப்போது நிறைவடையும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் இப்போது டைனமிக் சோதனையைச் செய்கிறார்கள், அதன் பிறகு அவர்கள் முழு அமைப்பு சோதனைக்குச் சென்று பின்னர் அமைப்புகளை ஒருங்கிணைப்பார்கள்.

அதன் பிறகுதான் ஏரோ ரயில்கள் ஒப்படைக்கப்படும். அவர்கள் இன்னும் உறுதியான தேதியை வழங்கவில்லை, ஆனால் இதற்கு முன்பு, ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அது நிறைவடையும் என்று கூறப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset