நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹலாலை உறுதி செய்து பொருட்களை வாங்கும் பிரச்சாரம் தொடங்கப்படும்: அக்மால் சாலே

கோலாலம்பூர்:

ஹலால் என்பதை உறுதி செய்து பொருட்களை வாங்கும் பிரச்சாரத்தை அம்னோ இளைஞர் பிரிவு தொடங்கவுள்ளது.

அதன் தலைவர் அக்மால் சாலே இதனை கூறினார்.

ஹலால் சின்னத்துடன் கூடிய ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அதை பொதுமக்கள் முறையாக பார்க்க வேண்டும்.

அது உண்மையிலேயே ஹலால்  என்பதை உறுதி செய்த பின்னர் அப்பொருளை வாங்க வேண்டும்.

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு ஹலால் சின்னத்தை பயன்படுத்தி நிலையைச் சரிபார்க்குமாறு பயனர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நான் எல்லா மலேசியர்களிடமும் உதவி கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு கடைக்குச் சென்றால், அங்கே ஹலால் சின்னம் இருக்கும். 

எந்தப் பொருட்களுக்கு ஹலால் சின்னம் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

எதுவும் இல்லையென்றால், அதை தயவுசெய்து அம்னோ மலேசிய இளைஞர்களிடம் சொல்லுங்கள்.

இந்த மோசடியில் ஹலால் சின்னத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset