நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Magic mushroom என்பது செயற்கை கஞ்சா: டத்தோ ருஸ்லின் ஜூசோ

கோலாலம்பூர்:

'Magic mushroom' என்பது மின்னியல் சிகரெட்டுகளில் பயன்படுத்துவதற்காகத் திரவ வடிவில் தயாரிக்கப்பட்ட செயற்கை கஞ்சா என்பதை தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின்  இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ உறுதிப்படுத்தியுள்ளார்.

அதனைப் பயன்படுத்திய போதைப் பித்தர்கள் உள்ளடக்கிய 50 சம்பவங்களை ஆராய்ந்தபோது அது பற்றித் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். 

'Magic mushroom' என்ற அந்தத் திரவம் மின்னியல் சிகரெட் வாயிலாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இளையர்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய செயற்கைப் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. 

அதேநேரம் புதுவகை போதைப்பொருள்களும் தயாரிக்கப்பட்டு வருவதை அதிகாரிகள் சுட்டினர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset