நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரஸ்வதி தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி - பாலர் பள்ளி நேர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது

சரஸ்வதி தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியின் 2024/2025 கல்வியாண்டுக்கான பாலர் பள்ளி நேர்த்தி நிறை விழா 15 ஜனவரி 2025 அன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை கோலாலம்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திருமதி சீத்தா தங்கவேலு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தனது உரையில் மாணவர்களின் கல்வி அடைவுகளசிறுவயதிலேயே பரிமளிக்கச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமாகயிருந்து, பல்கலைக்கழகம் செல்லும் நோக்கத்தையும் அதன் அவசியத்தையும் இப்போதே எடுத்துரைக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழ் மொழியின் பெருமையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெகதீஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அவர், இவ்விழாவை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாலர் பள்ளி மாணவர்களின் நடனங்களும் படைப்புகளும் விழாவின் முக்கிய அம்சமாக விளங்கின.

மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் திறமைகளின் அடைவுகளை பாராட்டும் வகையில் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

இவர்களுக்கு பயிற்சி அளித்த பாலர் பள்ளி ஆசிரியர்கர்கள், சத்தியவாணி, நித்யவாணி ஆகியோருக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்கள்

இந்த விழா, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெற்றோர்களின் துணையையும், தமிழ்ப்பள்ளிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு பயனுள்ள துவக்கமாக அமைந்தது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset