நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவைச் சுற்றியுள்ள வணிகக் கடைகள் கட்டங்கட்டமாக மேம்படுத்தப்படும்: டிபிகேல்

கோலாலம்பூர்: 

தலைநகரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவைச் சுற்றியுள்ள வணிகக் கடைகள் பாழடைந்து இருக்கும் நிலையில், அதனை மேம்படுத்துவதற்கான பணிகள் கட்டங்கட்டமாக செயல்படுத்தப்படும் என்று கோலாலம்பூர் மாநகர மன்றம், டிபிகேல் தெரிவித்தது. 

பொதுமக்களின் கவனம் செலுத்தும் பகுதிகளில் தற்போதுள்ள வணிக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இந்த மேம்பாட்டு பணிகள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்று டிபிகேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியிலுள்ள, ஜாலான் மெலாயு, மேடன் புனுஸ், சேகி 3 புனுஸ் போன்ற வணிக மையங்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் மேம்படுத்தப்படும். 

எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் முக்கியத் திட்டங்களில், ஜாலான் மெலாயுவிலுள்ள வணிகர்களுக்குச் சம்பந்தப்பட்ட பகுதியில் புதிய கடைகள் வழங்கப்படும்.

இருப்பினும், மேம்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, ​​சம்பந்தப்பட்ட வர்த்தகர்களின் வணிக நடவடிக்கைகள் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, தற்காலிக வணிக இடங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset