நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இ-காசேவில் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் இலவசமாக பயிலலாம்: சுரேன் கந்தா

பெட்டாலிங் ஜெயா:

இ-காசேவில் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் இலவசமாக பயிலலாம்.

அக்கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.

பெட்டாலிங்ஜெயாவில் உள்ள ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கல்வி, ஆரோக்கியம், பொருளாராரம், ஒற்றுமை, முன்னேற்றம் ஆகியவை ஸ்ரீ முருகன் நிலையத்தின் முதன்மை கருப்பொருளாக உள்ளது.

இந்த கருப்பொருளை அடிப்படையாக கொண்டே ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இவ்வாண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

ஆகவே இதன் அடிப்படையாக கொண்டு இன்று 5 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

மேலும் நாட்டில் பி40 குடும்பங்களைச் சேர்ந்த நிறைய பேர் ஏழைமை நிலையில் உள்ளனர். 

அவர்களின் ஏழைமை நிலையை உடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே ஆயுதம் கல்வி தான்.

அதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்த பி40 அதாவது இ-காசேவில் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்களிலும் அம் மாணவர்கள் பயிலலாம்.

கல்வி நிலையம் இல்லாத இடங்களில் உள்ள மாணவர்கள் பிரமஸ்ட்ரா இணைய பக்கத்தின் வாயிலாகவும் கல்வி பயிலலாம்.

இதுதான் இந்திய சமுதாயத்திற்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வழங்கும் பொங்கல் பரிசாகும்.

ஆகவே இந்திய பெற்றோர்களும் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

குறிப்பாக இந்திய சமுதாயத்தின் கல்வி புரட்சிக்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து பாடுபடும் என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset