நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தான், திரெங்கானுவில் இன்று காலை பலத்த மழை பெய்யும்

பெட்டாலிங் ஜெயா:

சபா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை மாநிலங்களில் இன்று காலை பலத்த மழை, காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா, கணித்துள்ளது.

இந்த மோசமான வானிலை பிற்பகல் 1 மணி வரை நீடிக்கும் என்று மெட்மலேசியா அறிவித்துள்ளது.

கிளந்தானில் தும்பட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தனா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் பூத்தே, கோலா கிராய் பகுதிகளை உள்ளடக்கியது.

இதற்கிடையில், திரெங்கானு பெசுட், சேத்தியூ, கோலா நெருஸ் மற்றும் கோலா திரெங்கானு போன்ற திரெங்கானுவின் பல பகுதிகளில் பலத்த மழை காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபாவில் சண்டாகான், குடாட் ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset