செய்திகள் மலேசியா
தம்புன் தொகுதியின் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் பதிவாகும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம்
ஈப்போ:
இங்குள்ள தம்புன் தொகுதியில் ஐந்து தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் இவ்வாண்டில் முதலாம் ஆண்டில் பதிவாகும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் தொகுதியான தம்புன் தொகுதியின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ் குமார் செங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா நிகழ்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு தம்புன் தொகுதி இந்திய மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு தங்கள் பிள்ளைகளை இங்குள்ள கிளேபாங், சத்திய சீலா, தஞ்சோங் ரம்புத்தான், சிம்மோர் தோட்டம் மற்றும் செங்காட் கிண்டிங் தமிழ்ப்பள்ளி ஆகிய தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை முதலாம் ஆண்டில் பயில பதிவு செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, தம்புன் தொகுதியில் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு பயில்வதற்கு நிதியுதவி வழங்கப்படும். அதாவது இலவசமாக நங்கள் கல்வியை அவர்கள் தொடரலாம். கடந்தாண்டில் திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் ஐவர் இணைந்து படித்து வருகின்றனர். இவ்வாண்டில் இதுவரை எழுவர் பதிவு செய்து படித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும். மேலும் தகவலை தம்புன் தொகுதி சேவை மையத்தை தொடர்புக்கொண்டு பெற்றுக்கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் அடுத்த வாரம் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு பிரதமர் இத்தொகுதி மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை இத்தொகுதியில் இந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு போட்டி விளையாட்டு, பரிசளிப்பு நிகழ்வுகளுக்கு தம்புன் நாடாளுமன்ற தொகுதி மானியம் வழங்கியுள்ளது. அத்துடன், இரு தமிழ்ப்பள்ளிகளுக்கு திடலுக்காக நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில், சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினார் பிரதமரின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ் குமார். அவருடன் பள்ளி வாரியத்தலைவர் இரா.சேகர் மற்றும் கல்வி அதிகாரி ஹெரி கிச்சேக் மாணவர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினார்கள். பள்ளித் தலைமையாசிரியர் சு .மஹாராணி தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக முடிவுற்றது.
- ஆர்.பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
December 19, 2025, 1:09 pm
ஜாலான் கிளாங் லாமாவில் குடிநுழைவு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: 90 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
December 19, 2025, 1:01 pm
தொடரும் கனமழை: 6 மாநிலங்களில் 14,905 பேர் வெள்ளத்தால் பாதிப்பு
December 18, 2025, 8:44 pm
2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 6:14 pm
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
December 18, 2025, 5:02 pm
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
December 18, 2025, 1:53 pm
