
செய்திகள் மலேசியா
இந்து சங்கத்திற்கு அதிகாரம் இல்லை என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் கூறுவதா?: இந்து சங்கம் அதிருப்தி
கோலாலம்பூர்:
ஆலயங்களில் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அதிகாரம் மலேசிய இந்து சங்கத்திற்கு இல்லை என கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸாலேஹா கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.
அவரின் இக்கூற்று கண்டனத்துக்குரியது என்று அதன் தலைவர் தங்க கணேசன் கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளாக நாட்டில் இந்து சமயம், ஆலயங்கள் சார்ந்த விவகாரங்களுக்குத் தீர்வுக் காண மலேசிய இந்து சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இன்று நாட்டில் இந்து ஆலயங்கள் தங்கள் வழிபாடுகளையும் நிர்வாகத்தையும் சிக்கலின்றி வழிநடத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்து சங்கம் மேற்கொண்டது அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஆனால் புதிதாக பணிக்கு வரும் சிலர் தாங்கள்தான் எல்லாம், மற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தோரணையில் நடந்து கொள்வது வழக்கமாகி விட்டது.
இந்த மனப்போக்கினால் விளைந்த சிக்கல்கள், பிரச்சனைகள் ஏராளம், அது இன்றும் தொடர்வது அதிருப்தி அளிக்கிறது.
புதியவர்களுக்கு தன்னால் மட்டுமே அல்லது தன்னை முன்னிருத்தியே அனைத்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக்குவது இயல்பு தான்.
சட்ட ரீதியில் இந்து சங்கத்திற்கு ஆணையிடும் அதிகாரம் இல்லை தான்.
ஆனால், தார்மீக அடிப்படையில் நாட்டில் இந்து சமயம் நிலைத்து நிற்க முன் நின்று அரணாக விளங்குவது இந்து சங்கம் மட்டுமே.
அதற்கான முழு அங்கீகாரத்தையும் மலேசிய அரசாங்கம் மலேசிய இந்து சங்கத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஆலயங்கள் இந்து சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வழிபாடுகளையும் நிர்வாகத்தையும் நடத்தி வருகின்றன.
இதற்கு உறுதுணையான அங்கீகரிக்கப்பட்ட ஆலயக் கையேடு எனும் புத்தகம் பயன்பாட்டில் இருக்கிறது.
பிரச்சனை உள்ள ஆலயங்கள் பற்றி பொது வெளியில் தெரியும். அவற்றில் பல ஆலயங்கள் இந்து சங்கத்தின் தொடக்க ஆலோசனைகளை ஏற்காமல் செயல்பட்டவையாக இருக்கும்.
விவகாரம் பூதாகரமானதாக மாறிய பிறகு இந்து சங்கம் மீதே மீண்டும் பழி சுமத்தப்படுவது தொடர்கதை.
ஆனால், இந்து சங்கத்தால் ஆரம்பக் கட்டத்திலேயே விவகாரங்களைப் பேசி தீர்வுக் காணப்பட்ட ஆலயங்கள் ஏராளம்.
ஆனால் இந்து சங்கத்தை மேம்போக்காக அதிகாரம் இல்லாத இயக்கம் என மிக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டிய அமைச்சரே பேசியிருப்பது வருத்தத்குரியது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am