நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானியின் கட்டமைப்பு மலேசியா - ஜப்பான் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது  : ஜப்பான் பிரதமர் இஷிபா 

புத்ரா ஜெயா : 

மாடனியின் கட்டமைப்பு மலேசியா - ஜப்பான் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது  என்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா தெரிவித்தார். 

தற்பொழுது, ஜப்பான் பிரதமரும்  மலேசிய பிரதமரும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.  

இந்த ஒப்பந்தமானது, நாட்டின் நிலைத்தன்மையையும்  பொருளாதாரத்தையும்  வளர்க்க வழிவகுக்கும் என்று இஷிபா கூறினார். 

34 ஆண்டுகளுக்குப் பிறகு, மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் இஷிபா, மலேசிய நாட்டின் வளர்ச்சியையும், உலக அரங்கில் பிரதமர் அன்வாரின் தலைமைத்துவத்தையும் பாராட்டினார்.

மலேசியாவின் உற்பத்தித் துறையில்  நான்காவது பெரிய முதலீட்டாளராகவும், வர்த்தகப் பங்காளியாகவும் ஜப்பான் திகழ்கின்றது. 

மலேசியாவில், 2023 - ஆம் ஆண்டில்  ஜப்பானின் மொத்த வர்த்தகமானது 156.75 பில்லியன் ரிங்கிட் குறிப்பிடத்தக்கது. 

- தர்மவதி கிருஷ்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset