நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம் அல்லாத நண்பரின் இறப்புக்கு செல்ல ஜாக்கிமின் அனுமதி வேண்டும் என்ற விதி மலேசியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

முஸ்லிம் அல்லாத நண்பரின் இறப்புக்கு  செல்ல ஜாக்கிமின் அனுமதி வேண்டும் என்ற விதி மலேசியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

பிரதமர் துறை இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் நயீம் மொக்தார், 

மதங்களுக்கு இடையேயான நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பில் பேசிய அவர், முஸ்லிம் அல்லாதவர்களின்  இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் முஸ்லிம் நண்பர்கள் ஒப்புதல் பெற வேண்டும் என அமைச்சர் சொல்கிறாரா?

யாராவது இறந்தால், முஸ்லிம்கள் இறுதி மரியாதை செலுத்த அனுமதிப்பதற்கு முன்பு ஜாக்கிமிடம் அனுமதி கேட்க வேண்டுமா?

குறிப்பாக கிள்ளானில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் தகன மேடைக்கு அடுத்ததாக முஸ்லிம் கல்லறை அமைந்திருப்பதால்,

நகராட்சி மன்ற கட்டிடத்திற்கு வெளியே அனைத்து உடல்களையும் தகனம் செய்ய வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஒரு முஸ்லிம் அல்லாதவர் தனது முஸ்லிம் நண்பரை திருமணத்திற்கு அழைக்க விரும்பினால்  அதற்கும் ஜாக்கிமின் ஒப்புதல் தேவையா இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற புதியபுதிய விதிகள் மலேசியர்களின் ஒற்றுமையை சிதைத்து சீர்குலைக்கும்.

மேலும் சமூகத்தைப் பிளவுபடுத்த இன, மதப் பிரச்சினைகளை எவ்வாறு கருவிகளாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஆகையால் இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக தலையிட வேண்டும்.

மேலும் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அரசாங்கம் மற்ற இனங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset